Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு: ரயில்வே அமைச்சகம் பரிந்துரை


புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்தார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியது:
புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து வேலை நிறுத்த கோரிக்கைகளை அரசு ஏற்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. CLICK HERE-AIRF LETTER

52 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே தொழிலாளர்களிடையே காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.
விஆர்எஸ் கொடுக்கும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பிப்ரவரி 17-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் பொது மகா சபையைக் கூட்டி வேலை நிறுத்த நோட்டீஸ் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்ததுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மத்திய அரசு அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தை கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
அந்தப் பேச்சவார்த்தையில் ரயில்வே அமைச்சரால் நியமிக்கப்பட்ட ரயில்வே வாரிய தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவர் புரோகித், பொதுச் செயலாளர் எஸ்.ஜி.மிஸ்ரா ஆகியோருடன் நிர்வாகத் தலைவரான நானும் கலந்துகொண்டேன்.
பேச்சுவார்த்தையின் முடிவில் ராணுவத்துக்கு இணையாக ரயில்வே தொழிலாளர்களையும், புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து விலக்கி மத்திய அரசிடம் ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வாரிசுகளுக்கு வேலை தரும் திட்டத்தில் வேலை வழங்கும்போது ஏற்கெனவே உள்ள குடியிருப்பை வாரிசுகளுக்கு மாற்றி தருவது என்றும், மொத்த பணிக்காலம் 20 ஆண்டுகள் இருந்தால் போதும் என முடிவெடுக்கப்பட்டது.
இதர கோரிக்கைகளில் அடிப்படை சம்பளத்தோடு டி.ஏ. வை இணைப்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவை அறிவிக்கும் எனவும், மற்ற கோரிக்கைகளில் உடன்பாடு காணப்பட்டு கூட்டுக் குழு ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த இறுதி முடிவு பிப்ரவரி 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார் என்.கண்ணையா.

No comments:

Post a Comment


web stats

web stats