Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்குஇன்று (13.02.2014)முதல் நுழைவுச்சீட்டு



பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை (பிப்.13) முதல் (பிப்.16) வரை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 தனித்தேர்வு எழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளமான www.dndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்ய வேண்டும்.

நேரடித் தனித்தேர்வர்களுக்கு மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதும் மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வுகளில் 40 மதிப்பெண்ணுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வில் மீண்டும் பங்கேற்க வேண்டும். தத்கல் திட்டத்தின் கீழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தேவராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats