Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

விழுப்புரம் அருகே, கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், எசாலம் கிராமத்தில், வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். ராமநாத ஈசுவரர் கோவில், தெற்கு திருச்சுற்று சுவர் அருகே, நிலை நிறுத்தப்பட்டு, மக்கள் வழிபட்டு வரும் கொற்றவை சிலையை ஆய்வு செய்தனர்.


உடைந்த நிலையில்... : நின்ற நிலையில் உள்ள கொற்றவை சிலை, எட்டு கரங்களை கொண்டுள்ளது. இதில், வலதுபுறத்தில் முன்கரம் தவிர, மற்ற கரங்கள் இருந்த பகுதி உடைந்துள்ளன. முன் கரத்தில் காண்டாமணியும், இடது புறம் முன்கையில் நாகமும், மணிக்கட்டில் கிளி ஒன்றும் உள்ளது. இடது மேல் கரங்களில் சங்கு, வில், கேடயம் உள்ளன. தலை கேசங்களைத் தூக்கி அள்ளி முடிந்த நிலையிலும், காது, கழுத்தில் ஆபரணங்களும், மார்பில் கச்சையும், இடையில் அரை ஆடையும், புஜங்களில் வாகுவளையங்களும், மணிக்கட்டில் வளையல்களும், கால்களில் சிலம்பும் காணப்படுகின்றன. சிற்பத்தின் இடதுபக்கம், சிறிய அளவில் மான் உருவமும், வலது பக்கம் வீரன் உருவமும் உள்ளது. வீரனின் கால்களின் கீழ், இரண்டு வரிகளை கொண்ட கல்வெட்டு உள்ளது.

அய்யனார் வழிபாடு : கல்வெட்டு குறித்து, ஆய்வாளர் வீரராகவன் கூறியதாவது: இந்த கல்வெட்டின் காலம், கி.பி., 6ம் நூற்றாண் டாகும். ராமநாத ஈசுவரர் கோவில் கட்ட, 400 ஆண்டுகள் முன், இங்கு, கொற்றவை, அய்யனார் வழிபாடு இருந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டில், கொற்றவை சிலையை வழிபாட்டிற்காக இனமக்கள் வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், 60க்கும் மேற்பட்ட இடங்களில், கொற்றவை - துர்கை சிலைகளை, இது வரை கண்டறிந்துள்ளோம். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே, பல்லவர் கால எழுத்து பொறிப்புகளுடன் கொற்றவை சிற்பங்கள் உள்ளன. இவ்வாறு, வீரராகவன் கூறினார்.

No comments:

Post a Comment


web stats

web stats