Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சுயநிதி பள்ளிகளின் பெயர் மாற்றம், அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பு

தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் கல்வி, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகை கல்வி முறை இருந்தன. இந்த முறைகள் அனைத்தும் ஒன்று சேர்த்து சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், அரசு பள்ளிகள் தவிர மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும் அதே பெயரில்தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெயர் மாற்றப்படும். உதாரணமாக தற்போது செயிண்ட்மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, என்று அழைக்கப்படும் பள்ளி, இனிமேல் செயிண்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளிஎன்று அழைக்கப்படும்.

மேலும் தொடக்க கல்வித்துறையில்உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் தவிர மற்ற சுயநிதி தொடக்க பள்ளிகள், சுயநிதி நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் என்ற புதிய இயக்குனரகத்தின்கட்டுப்பாட்டில்இருக்கும்.
அதுபோல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில்உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகத்தின்கட்டுப்பாட்டில்இருக்கும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் என்பது சுயநிதி பள்ளிகள் இயக்குனரகமாக மாறும் என்று கூறப்படுகிறது.
இதனால் ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற நிலை தவிர்க்கப்பட்டுஅனைத்து மாணவர்களும் சமம் என்ற நிலை ஏற்படும். நாங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கிறோம் என்று யாரும் தற்பெருமையாக கூற இயலாத வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதை கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment


web stats

web stats