Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வகுப்பறையில் பாடம் நடத்திய ஆசிரியை மயங்கி விழுந்து சாவு

கடையநல்லூர் அருகே வகுப்பறையில் பாடம் நடத்திய ஆசிரியை மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட மாணவ– மாணவிகள் கதறி அழுதனர்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:–
பள்ளிக்கூட ஆசிரியை

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள கலைஞர் காலனி பொதிகைநகரைச் சேர்ந்தவர், வாசுதேவன். இவர் மம்சாபுரம் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி சரோஜா (வயது 45). அவரும் ஆசிரியை ஆவார். இவர் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வளையர் இந்து தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை சரோஜா வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் மதியம 12 மணி அளவில் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவ– மாணவிகளும் ஆர்வமுடன் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தனர்.

மயங்கி விழுந்து சாவு


பாடம் நடத்திக் கொண்டிருந்த சரோஜா திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட மாணவ– மாணவிகள் பதறி துடித்தனர். சில மாணவிகள் கதறி அழுதனர். அக்கம் பக்கத்து வகுப்பறைகளில் இருந்த ஆசிரிய– ஆசிரியர்களும், மாணவ– மாணவிகளும் அந்த வகுப்பறைக்கு ஓடி வந்தனர். இதனால் பள்ளிக்கூட வளாகத்தில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.


உடனே ஆசிரியை சரோஜாவை, சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


மாணவ– மாணவிகள் கதறல்


உடனே ஆசிரியை சரோஜா உடல் பிரேத பரிசோதனைக்கு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


ஆசிரியை இறந்த சம்பவம் பற்றி கேள்விபட்டதும் மாணவ– மாணவிகள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரவியது. இந்த சம்பவம் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment


web stats

web stats