மேலும் அவர், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது. சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும்.மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்கப்படும் உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை,சான்றிதழ் வழங்கப்படும். +1மற்றும் +2 பாட திட்டம் குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. மதிப்பெண் கொண்டு சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டாது. எனகூறினார்.
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிலும் இதேமுறை கடைபிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment