Wednesday, 15 January 2014

6 கட்டமாக லோக்சபா தேர்தல்: தேர்தல் தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிப்பு

லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்ற பரபரப்பு நிலவுகிறது. இது தொடர்பான அறிவிப்பு, எப்போதும் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, தலைமை தேர்தல் ஆணையர், எச்.எஸ்.பிரம்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
எந்த தேதியில்லோக்சபா தேர்தல் எந்த தேதியில் நடைபெறும் என்பதை, பிப்ரவரி மாத இறுதியில் அறிவிப்போம். கடந்த, 2009 தேர்தலுக்கு, பிப்ரவரி இறுதியில் தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இம்முறை, ஆறு கட்ட தேர்தலாக நடைபெறும்; 2009ல் ஐந்து கட்ட தேர்தலாக நடந்தது. இந்தியா முழுவதும் உள்ள நிலைமைகளை அலசி ஆராய்ந்து, மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பின் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்.தேர்தலுக்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தையும், தேர்தல் ஆணையம் துவக்கி விட்டது. தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பாக நடைபெறும், கருத்து கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
'நோட்டா':'யாருக்கும் ஓட்டளிப்பது இல்லை' என்ற, 'நோட்டா' மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இது பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர். இது பெரும் விளைவை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் பிரதிநிதிகள் சரியாக செயல்படவில்லை என்றால், மக்கள் திருப்பி அழைத்து கொள்ளும் வசதியை, கிராம பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல்களில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இந்தியா முழுமைக்கும் அமல்படுத்துவது என்பது இயலாத காரியம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats