Wednesday, 15 January 2014

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய மெட்ரிக் பள்ளிகள் சங்கம் கோரிக்கை.

ஆசிரியர் தகுதித்தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் மண்டல மாநாடு மாவட்டத் தலைவர் மலைச்சாமி நடராசன் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. பள்ளிகளின் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கே.முத்துகணேச மூர்த்தி, மணிவண்ணன், சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் கேஆர் நந்தகுமார், துணைத்தலைவர் ஸ்ரீதர், மாநில அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், திருச்சி சந்திரசேகர் ஆகியோர் விருதுகள் வழங்கிப் பேசினர். தீர்மானங்களை விளக்கி பிவி கந்தசாமி, திருஞானமூர்த்தி, சாலியவாகனன், மாரிச்செல்வம் ஆகியோர் பேசினர்.


தீர்மானங்கள் வருமாறு:

அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும். அரசு துவக்கப்பள்ளியைப் போல் நர்சரி, பிரைமரி பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான அனைத்து பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற அரசாணையை உடனே செயல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிடும் அனைத்து அரசு சலுகைகளையும் தனியார்பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.பள்ளி வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை 100 சதவீதம் உயர்த்தியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிடட் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்டச் செயலாளர் ராஜூ வரவேற்றுப் பேசினார். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats