Monday, 13 January 2014

த.அ.உ. சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசின் அலுவலகங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்களுக்கு, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்து, தகவல் கேட்போரிடம், சில நேரங்களில், அவர்களின் முகவரிகளை தரும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது. தகவல் கோருபவரின் மனுவில், தபால் பெட்டி எண் இருக்கும் பட்சத்தில், அவரிடம், முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது. தகவல் தொடர்புக்கு, அந்த தபால் பெட்டி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தபால் பெட்டி எண் இல்லாத பட்சத்தில், முகவரியை தரும்படி கேட்கலாம். விண்ணப்பம் தகுதியானதாக இருந்து, தபால் பெட்டி எண் இருந்தால் போதும்; முகவரி எதுவும் தேவையில்லை. இதேபோன்ற ஒரு வழக்கில், கோல்கட்டா ஐகோர்ட் அளித்த தீர்ப்பும், இதை வலியுறுத்தியுள்ளது.இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats