Monday, 13 January 2014

மாணவிக்கு கூடுதல் மதிப்பெண் போட்டு மோசடி: அண்ணா பல்கலைக்கழக அதிகாரி இடைநீக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு கூடுதல் மதிப்பெண் போட்டு மோசடி செய்ததாக தேர்வு கட்டுப்பாட்டு துணை அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சில வருடங்களுக்கு முன் செமஸ்டர் தேர்வில் உள்ள விடைத் தாள்களை மாற்றி மோசடி செய்யப்பட்டதாக புகார் செய்யப்பட்டு பூதாகரமாக வெடித்தது. இது தொடர்பாக விசாரணை நடந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு புகார் அண்ணா பல்கலைக்கழகத்தில் வந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரியில் தேர்வு துணை கட்டுபாட்டு அதிகாரியாக வேலை பார்ப்பவர் பேராசிரியர் வி.பாண்டியராஜன். இவருடைய உறவுக்கார மாணவி ஒருவர் (தங்கை மகள் என்று கூறப்படுகிறது) அதே அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரியில் வேதியியல் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அவருக்கு செமஸ்டர் தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அதிகாரி வி.பாண்டியராஜன் தான் காரணம் என்றும் புகார் எழுந்தது.
அதிகாரி இடைநீக்கம்
இது தொடர்பாக விசாரணை நடத்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிந்ததும் பேராசிரியர் பாண்டியராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவர்கள் அளித்துள்ள புகாரில் பாண்டியராஜனின் உறவுக்கார மாணவி நடுத்தரமாக படிப்பவர் தான் என்றாலும், செமஸ்டர் தேர்வில் மட்டும் அவர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். ஒரு தேர்வில் பலரும் தோல்வியுற்ற நிலையில் அந்த மாணவி மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார். அதற்கு காரணம் பேராசிரியர் பாண்டியராஜன் தான், அவர் மீது கடுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பாண்டியராஜன் மீது முழு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats