Wednesday, 15 January 2014

மிழர் திருநாளை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள்!- எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை இல்லை.

தமிழகத்தின் கொங்கு பகுதி மாவட்டங்களில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தமிழர் திருநாளான பொங்கலை புறக்கணித்துள்ளன. பத்தாம் மற்றும்
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நெருங்குவதால் ரகசிய உத்தரவு மூலம் சிறப்பு வகுப்புகள் என்கிற பெயரில் பொங்கல் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறையால் ஒவ்வொரு ஆண்டுக்கான விடுப்பு நாட்கள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு ஆண்டு குறிப்பேடு வெளியிடப்படுகிறது.

பேரிடர் நாட்களில்...

மழை, புயல் போன்ற பேரிடர் நாட்களில் மாநில அரசு அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுப்பை முடிவு செய்வர். பொதுவாக விடுப்பு நாட்களில் தனியார் பள்ளிகள் பள்ளியை நடத்தினால், அப்பள்ளி நிர்வாகத்துக்கு அரசு அபராதம் விதிக்கும். இது முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சென்றுவிடும்.

கொங்கு மண்டலத்தில் புறக்கணிப்பு!

ஆனால், ஒவ்வொரு முறையும் பொங்கல் திருவிழாவின்போது பொதுத் தேர்வுகளை காரணம் காட்டி கொங்கு பகுதியின் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, ஊத்தங்கரை, திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பெரும்பான்மையான அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பொங்கல் விடுமுறையை புறக்கணிக்கின்றன. இம்முறை மீலாது நபி, பொங்கல் பண்டிகைக்காக இன்று தொடங்கி வரும் 16-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்தப் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை மட்டுமின்றி மீலாது நபி விடுமுறையையும் மேற்கண்ட பள்ளிகள் புறக்கணித்துள்ளன. சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் நடப்பது மட்டுமின்றி, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளும் நடக்கின்றன. ஏனெனில் ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளுக்கு முறையே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்கள் கற்பிக்கப்பட்டு, பொதுத் தேர்வு பாணியிலான தேர்வுகள் தனியார் பள்ளிகளால்நடத்தப்படுகின்றன.

எதிர்த்து பேசினால்…

பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாடத்திலும், பிளஸ் 2 தேர்வுகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலும் அக மதிப்பீடு, புற மதிப்பீடு மதிப்பெண்கள் அந்தந்த பள்ளி நிர்வாகங்களால் வழங்கப்படுகின்றன. எதிர்த்து பேசினால் மதிப்பெண்கள் பாதிக் கப்படும் அபாயம் இருக்கிறது. இதனால், பெற்றோர்களால் பள்ளி நிர்வாகத்தின் இப்போக்கை எதிர்க்க முடியவில்லை.பெரும்பாலான பண்டிகைகள் மதம் சார்ந்த விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. ஆனால், பொங்கல் பண்டிகை மட்டுமே தமிழர் பண்பாடு சார்ந்தும் உழவுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் கொண்டாடப் படுகிறது. ஏற்கெனவே இளம் தலைமுறையினர் இடையே தமிழ் மொழிப்பற்று, தமிழர் பண்பாடு மற்றும் விவசாயம்சார்ந்த விழிப்புணர்வு மங்கி வருகிறது. மேலும், இன்றைய மாணவர்களுக்கு பாடத் திட்டம் சார்ந்தும், தேர்வுகளின் கடுமையான போட்டிகள் சார்ந்தும் மன அழுத்தங்கள் மிக அதிகம். இதனால், தற்கொலைகளும் தொடர்கின்றன. இவைதவிரகூட்டுக் குடும்பம், உறவுகளின் பிணைப்புகள் அறுந்துவரும் நிலையில் இதுபோன்ற பண்டிகை களே கிராம வாழ்க்கையையும் உறவுகளையும் புத்துணர்வு பெறசெய்கின்றன.சமூகத்துக்கு முன்னு தாரணமாக இருக்க வேண்டிய பள்ளிகளே பொங்கலை புறக்கணிப்பது வேதனைக்குரியது. வள்ளலார் நாள் போன்ற நாட்களின்போது மாவட்ட நிர்வாகங்கள் முன்கூட்டியே அன்றைய நாளில் மது, மாமிசம் கடைகள் செயல்படக்கூடாது என்று எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுகின்றன
.

அதேபோல் பள்ளிக் கல்வித்துறையும் அரசு விடுமுறை நாட்களுக்காக எச்சரிக்கைஅறிவிப்பை வெளியிட வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.இத்தகவலை பள்ளிக் கல்வித்துறை (மெட்ரிக்) இணை இயக்குநர் கார்மேகத்திடம்கொண்டுசென்றோம். அவர், “நீங்கள் சொல்லும் விஷயம் அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி, பொங்கல் பண்டிகைக்குவிடுமுறை விட நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats