5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Sunday, 22 December 2013

இடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிப்பதற்காக, அவர்களை கணக்கெடுக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றும், 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு, குழந்தை தொழிலாளர் சிறப்பு மையத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. பின்னர், அவர்கள், முறைசார் (ரெகுலர்) பள்ளிகளில், 6ம்வகுப்பு சேர்க்கப்படுகின்றனர். அங்கு பிளஸ் 2 வரை படிக்கலாம்
.
இந்நிலையில், குடும்பச்சூழல், படிக்க விருப்பமின்மை உள்ளிட்ட சில காரணங்களினால், அந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்றுவிடுகின்றனர். அவர்களுக்கு தொழில்பயிற்சி தந்து, ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களின் எதிர்கால குடும்ப பொருளாதரத்திற்காகவும், அவர்களுக்கு, மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம், மூன்று முதல் ஆறுமாத கால இலவச தொழிற்பயிற்சி அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும், ஐந்து ஆண்டுகளில், ரெகுலர் பள்ளியில் படித்து இடைநின்ற மாணவ, மாணவியர்களை கணக்கெடுக்கும் பணி, தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்ட இயக்குனர்கள் தலைமையில், தீவிரமாக நடந்து வருகிறது. அத்துறை பணியாளர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளோடு இணைந்து, இக்கணக்கெடுப்பு பணியை விரைந்து முடிக்க, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் நாராயணசாமி, "பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவ, மாணவியர் குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அவர்களுக்கு, தையல், எம்ப்ராய்டரி, காளான்வளர்த்தல், கம்ப்யூட்டர் அடிப்படை எலக்ட்ரானிக், அடிப்படை மோட்டார் மெக்கானிக், ஏசி மற்றும் பிரிட்ஜ் பழுதுபார்த்தல், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மொபைல் போன்களை பழுதுபார்த்தல், டி.டி.எச்., நிறுவுதல் உள்ளிட்டவை தொடர்பாக, அவர்களின் திறனுக்கேற்ப, மூன்று முதல் ஆறு மாத கால இலவச பயிற்சியளிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் அவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், தொழிற்பயிற்சிக்கான என்.சி.வி.டி., சான்றிதழ் வழங்கப்படும். அது, அவர்களின் எதிர்கால வேலைக்கு உதவும்" என்றார்.

No comments:

Post a Comment


web stats

web stats