திட்டக்குடி அருகே எரப்பாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். திட்டக்குடியை அடுத்துள்ள எரப்பாவூரில் இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளியானது கடந்த 2008ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதில் 120 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்களும் 2 ஆசிரியைகளும் பணிபுரிகின்றனர். பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை இயங்கும் வகுப்புகளுக்கு போதிய கட்டிட வசதி இல்லை. மோசமான கட்டிடத்தில் இயங்கும் சத்துணவு மையத்தை வெளியூரில் பணிபுரியும் அமைப்பாளர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இதுகுறித்து பெற்றோர்கள் கூறும்போது எதிரில் புறம்போக்கு இடத்தில் விளையும் பூசனிக்காயை கழுவாமல்கூட மதிய உணவாக சமைத்து போடுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தனர். பள்ளியை சுற்றி உள்ள மாட்டுத் தொழுவங்களால் சுகாதாரமற்ற நிலை உள்ளது. இந்த பள்ளியின் அருகே உள்ள சுமார் 10அடி பள்ளத்தில் தண்ணீர் முழுமையாக நின்று பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இந்ந பள்ளத்தின் எதிரில் இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு பெற்றோர் அருகில் உள்ள பள்ளம் காரணமாக பயந்து குழந்தைகளை அனுப்புவதில்லை. வெளியூரில் தங்கியுள்ள தலைமை ஆசிரியரும் சில ஆசிரியர்களும் பஸ் வசதி இல்லாததால் தினமும் காலை 9 3/4 மணிக்குத்தான் பள்ளிக்கு வருவதை காணமுடிகிறது. ஆசிரியர்கள் மிகவும் காலதாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் முறையிடுகின்றனர். பள்ளிக்கு என தனி விளையாட்டு மைதானம் இல்லை. மாடுகள் பள்ளிக்குள் கட்டப்படுவது சாதாராண விஷயமாகிவிட்டது. பள்ளியின் எதிர்புறம் உள்ள புறம்போக்கு இடத்தை ஆர்ஜீதம் செய்து விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இப்பகுதி இளைஞர்கள் முறையிடுகின்றனர்.
No comments:
Post a Comment