5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Sunday, 22 December 2013

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - 22.65 லட்சம் மாணவர்கள் பதிவு

2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர். மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில் 21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

CBSE பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் 13.25 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 70,000 அதிகம். அதேபோன்று, 12ம் வகுப்பு தேர்வில் 20,000 மாணவர்கள் வரை அதிகரிக்க உள்ளனர். இத்தேர்வுகளுக்கான தேதி விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2014ம் ஆண்டில், மொத்தம் 14,700 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்வை எழுதவுள்ளனர். பள்ளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, கடந்தாண்டை விட, இந்தாண்டு 800 பள்ளிகள் அதிகம். பல புதிய பள்ளிகள் CBSE  வாரியத்தில் இணைந்ததே இதற்கு காரணம்

No comments:

Post a Comment


web stats

web stats