5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 23 December 2013

அனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு பிரிட்டிஷ் நிதி நிறுத்தம்!


இந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அதிகாரிகள் ஊதாரித்தனமாக

செலவழித்ததன் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது பிரிட்டிஷ் அரசு.

9 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைவருக்கும் கல்வி என்ற திட்டம்தான் இந்த சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி). இதற்காக அரசு ரூ 91,431 கோடியை ஒதுக்குகிறது.

இதில்

ஐரோப்பிய யூனியன், உலக வங்கி ஆகிய அமைப்புகளின் நிதி உதவியும் அடங்கும். அந்த வகையில் பிரிட்டிஷ் அரசு மட்டும் ரூ 2370 கோடி வரை நிதி உதவி செய்து வந்தது,

ஆண்டுதோறும்,

இந்தப் பணத்தைக் கையாளுவதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக பிரிட்டன் பத்திரிகைகள் சமீபத்தில் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டன.

கல்வித் திட்டத்துக்கே சம்பந்தமில்லாமல் ரூ 80 கோடி வரை அதிகாரிகள் வெட்டியாக செலவழித்திருப்பதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்தது பிரிட்டிஷ் அரசு.

இதுகுறித்து,

இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது பிரிட்டன். முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றும், இதுகுறித்து முழுமையாக விசாரிக்க சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பதில் அனுப்பியது மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.

இந்த நிலையில்,

இந்தியாவுக்கு இனி எங்களது இந்த உதவி தேவையில்லை என டேவிட் கேமரூன் அரசு அறிவித்து, நிதியுதவியை முற்றாக நிறுத்தியுள்ளது.

சர்வ சிக்ஷா அப்யான் திட்டத்துக்கு போதிய நிதி ஆதாரம் இந்தியாவிடமே இருப்பதாகவும், பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ள அந்நாடு இனி தானாகவே இதனைச் சமாளித்துக் கொள்ளும் என்பதாலும் இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் சர்வதேச மேம்பாட்டுத் துறைச் செயலர் (UK Department for International Development) ஆன்ட்ரூ மிச்சேல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats