கூடலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், மாத்துார், கழனிப் பாக்கம், கூடலுார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 160 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில், எட்டு ஆசிரியர்கள் பணி புரிந்தனர். அவர்களில், நான்கு பேர் ஓய்வு பெற்ற நிலையில், தலைமை ஆசிரியர் உட்பட, நான்கு ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணிபுரிகின்றனர்.
இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் கல்வி கற்று வருகின்றனர். இதில் ஒரு ஆசிரியர், தற்போது நீண்ட விடுப்பில் சென்றுள்ளதால், இங்குள்ள, 160 மாணவர்களுக்கு, மூன்று ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால், ஒரே வகுப்பறையில், ஒன்று மற்றும் இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்களை அமரவைத்து, பாடம் நடத்துகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.
மாணவர்களின் நலன்கருதி, ஆசிரியர்களை நியமிக்க, மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, அச்சிறுபாக்கம் வட்டார கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலமணி கூறுகையில், "பள்ளியில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு செய்து மேலதிகாரி களுக்கு அனுப்பி உள்ளோம். இரண்டு மாதங்களில், காலி பணியிடங்கள் நிரப்பப்படலாம்" என்றார்.
No comments:
Post a Comment