5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Thursday, 26 December 2013

மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை

"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித விவரம், பள்ளி வளாகத்தில் பிளக்ஸ் பேனராக வைக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: சில பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி வெளியாட்கள் நூழைகின்றனர்; பள்ளிக்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்துகின்றனர் என சில இடங்களில் இருந்து புகார்கள் நேரடியாக வந்தன. தலைமை ஆசிரியர்கள் பொறுப்புடன் பணியாற்றி இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும்.
பொதுத்தேர்வு வர உள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் கற்பித்தல் பணி பாதிக்கப்படக் கூடாது. தேர்வு பணிகளுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாது. லேப்-டாப், சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது. இப்பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளி வளாகத்துக்குள் பள்ளியை சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பள்ளிக்குரிய பொருட்கள் பாதுகாப்பு குறைவு ஏற்படாத வண்ணம் கவனமாக வைத்திருக்க வேண்டும். இதில், ஏதேனும் குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க வேண்டி வரும். இவ்வாறு, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் "வாக்கிங்&' செல்லும் வழக்கம் உள்ளது.
இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்ட போது, "பள்ளியை சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கூறியுள்ளார். முகம் தெரியாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்பதே அந்த உத்தரவு. "வாக்கிங்" செல்பவர்களை அனுமதிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் விருப்பத்துக்கு உட்பட்டது" என்றார்.

No comments:

Post a Comment


web stats

web stats