5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 23 December 2013

பட்டதாரி ஆசிரியர்கள் 1000 பேருக்கு பதவி உயர்வு: விரைவில் கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறலாம். இவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள், இடமாறுதல் பெறலாம் என்ற நடைமுறை இருந்தது. ஆனால், இந்த நடைமுறையை பள்ளிக்கல்வித் துறை மாற்றி அமைத்தது.பதவி உயர்வுக்கு பிறகு, இடமாறுதல் பெற முடியாது என்றும், தேர்ந்தெடுத்த பொறுப்புகளில் இருந்தே அடுத்தடுத்து பதவி உயர்வு இருக்கும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல மாதங்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் ஏற்கனவே இருந்த நடைமுறையே பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.


இதைத்தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதவி உயர்வுக்கு தகுதி உடையவர்களின் பட்டியல், காலி பணியிடங்கள் போன்ற விபரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் பதவி உயர்வு மற்றும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் எனத் தெரிகிறது.


அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு தலைமை ஆசிரியர் பணியுடன் சமீபத்தில் நடந்த கலந்தாய்வு மூலம் இடமாற்றம் கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்டவர்கள் இப்பதவிகளை பெற்று, பல்வேறு மாவட்டங்களில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். எனவே, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.


ஆனால், பெரும்பாலான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் அனைவருக் கும் கல்வித் திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்களாக இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. தர்மபுரி மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் உள்ள காலியிடங்களே இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment


web stats

web stats