5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 23 December 2013

எழுத, படிக்க திணறும் மாணவர்களை மேம்படுத்தும் திட்டம் - SCERT முடிவு

ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின் தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், புதிய
திட்டத்தை செயல்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து, வரும் மே மாதத்திற்குள், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 56,573 பள்ளிகள் உள்ளன. இவற்றில், 1.35 கோடி, மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 89 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள, 46 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.


தனியார் பள்ளி மாணவர், ஆங்கிலவழியிலான பாடங்களை எழுதுதல், வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றில், ஓரளவிற்கு நல்ல நிலையில் உள்ளனர்.
தமிழில் தடுமாற்றம்,ஆனால், மொழிப்பாடங்களை, குறிப்பாக, தமிழ் பாடத்தை படிப்பதிலும், எழுதுவதிலும், தடுமாறும் நிலை உள்ளது.அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் மற்றும் ஆங்கிலவழி பாடங்களை படிப்பதற்கும், எழுதுவதற்கும், ஏராளமான மாணவர்கள் தடுமாறுவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புரிந்துகொள்ளும்
ஆற்றலும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.


இதனால், அடிப்படையில் தமிழ், ஆங்கிலவழி (மீடியம்) புத்தகங்களையும், சரளமாக வாசித்தல், எழுதுதல் போன்றவற்றில் திணறும் மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் தலைமையிலான, ஒன்பது பேர் கொண்ட குழு, புதிய திட்டத்தை செயல்படுத்த, 62 பக்க அறிக்கையை தயாரித்துள்ளது.


வகுப்பு வாரியாக, திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு, ஆறு மாதங்களுக்குள், சரளமாக எழுதவும், படிக்கவும் கூடிய திறனை ஏற்படுத்த, தலைமை ஆசிரியர் என்னென்ன செய்ய வேண்டும்
என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பயிற்சி:மாவட்ட வாரியாக, தலைமை ஆசிரியர்களுக்கு, இதற்கான பயிற்சி அளிக்கப்படும். மே மாதத்திற்குள், இந்த பயிற்சியை அளிக்க, இயக்குனர், கண்ணப்பன் திட்டமிட்டு உள்ளார்.இதுகுறித்து, அவர் கூறுகையில், ''விரைவில், இதற்கான ஆய்வு
குறித்து, டிசம்பரில் ஆய்வு செய்வோம். இந்த பயிற்சியில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்கலாம்,'' என, தெரிவித்தார்.

No comments:

Post a Comment


web stats

web stats