5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Tuesday, 24 December 2013

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றம் செய்து, தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அபூர்வ வர்மா உள்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜராமன், வணிகவரித்துறை முதன்மை செயலாளராகவும், நிரஞ்சன்மார்டிபொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை
முதன்மை செயலராகவும், மணிவாசகம், மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இறையன்பு அண்ணா மேலாண்மை, தலைமை இயக்குனர் பயிற்சி நிறுவன இயக்குனராகவும், பங்கஜ்குமார் பன்சால், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனராகவும், ஜெயக்கொடி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராகவும், பழனியப்பன் உயர் கல்வி துறை முதன்மை செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment


web stats

web stats