மாநில அரசின், குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்தை பெற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கட்டாயமாகிறது.
மாநில அரசின் குரூப்-1, குரூப்-2 அந்தஸ்தில் பணியாற்றும் அதிகாரிகள், அவர்களின் பணி மூப்பு, செயல்பாடுகளின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவது வழக்கம். இந்நிலையில், மத்திய பணியாளர் நலன் மற்றும் குறைதீர் அமைச்சகம் இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக பதவி உயர்வு பெற, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மாநில சம்பந்தப்பட்ட விஷயங்களில் எழுத்துத் தேர்வு, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு உள்ளிட்ட, நான்கு கட்ட மதிப்பீடுகளுக்குப் பின்னரே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேர்வு வைத்து பதவி உயர்வு தரும் நடைமுறையை, தமிழகம் உட்பட சில மாநிலங்கள் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment