rp

Blogging Tips 2017

மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெ.பெயர்!

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் இனி, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், பொன்னேரியிலுள்ள மீன்வளத் தொழில்நுட்பக் கழகம், மாதவரத்திலுள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் ஆகியவையும் தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரியில் மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட மீன்வளம் சம்பந்தப்பட்ட பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெலிக்ஸ் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மீன்வளத் துறை சார்பில் நேற்று (ஜூன் 1) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், ‘மீன்வள பல்கலைக்குத் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக இணையதளத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats