1.ஸ்டெரிலைட் நிர்வாகத்தை மூட கோரி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி குண்டுக்கு 13 நபர்களை இழந்த பிறகும் தொடர்ந்து போராடும் தூத்துக்குடி மக்களுக்கு பேராதரவை வழங்குவது.*
*2. 24.05.2018 ல் ஜேக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது போது அறிவித்தது போல் தொடர்ந்து ஆதரவு அளிப்பது.*
*3. ஸ்டெரிலைட் நிர்வாகத்தை மூட வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவு உடைய தீர்மானத்தை சட்ட மன்றத்தில் அனைத்து கட்சி ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அனுப்ப தமிழக அரசை வலியுறுத்துவது.*
*4. 31.05.2018 அன்று 11.06.2018ல் ஜேக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்ட அறிவிப்பினை அமைச்சர் மற்றும் துறை செயலாளர்களிடம் வழங்குவது.*
*5. ஒருங்கிணைப்பாளர்கள் குழு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள துண்டுபிரசுரம், சுவரொட்டி ஆகியவற்றை அச்சிட்டு ஒட்டுவது வழங்குவது.*
*6. ஜுன் 4 முதல் 8 வரை மாவட்டங்களில் ஆசிரியர் அரசு ஊழியர்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரத்தினை தீவிரப்படுத்துவது.*
*7. ஜுன் 7 மற்றும் 8 தேதியில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைப்பாளர்கள் சென்று சந்தித்து ஆதரவு திரட்டுவது.*
*8. ஜுன் 4ல் போராட்டம் குறித்த பேனர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்தல்.*
*9. ஜுன் 9ல் மீண்டும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆயத்த பணிகளை மேற்கொள்வது*.
*10. காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வது.*
*11.சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும் போது ,அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலையில் ஆரப்பாட்டம் நடத்துவது.*
*
*"மேற்கண்ட தீர்மானங்கள் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது"*
No comments:
Post a Comment