rp

Blogging Tips 2017

கல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டும் தனியாருக்கே !!!

கல்வித்துறையில் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை பயன்படுத்தும் ஏழாயிரம் சி.யு.ஜி., அலைபேசி இணைப்புக்கான அனுமதியை மீண்டும் தனியார் நிறுவனமே கைப்பற்றியுள்ளது. இத்துறை செயலாளர் முதல் அலுவலக கண்காணிப்பாளர், திட்டப் பணி ஆசிரியர் பயிற்றுனர்கள் வரை 7 ஆயிரம் பேர் ஏர்செல் நிறுவன சி.யு.ஜி., அலைபேசி இணைப்பில் இருந்தனர்.


அது மூடப்பட்டதும் இந்த இணைப்புக்களை பெற தனியார் நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டது. பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் பேச்சு நடத்தியது. ஆனால் தனியார் நிறுவனம் ஒன்றே மீண்டும் கைப்பற்றி, அதற்கான 'சிம்' கார்டுகளும் வழங்கப்பட்டு விட்டது.பி.எஸ்.என்.எல்.,ஐ விட இந்த இணைப்பில் கட்டணமும் அதிகம், சலுகைகளும் குறைவு, என தலைமையாசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் கூறியது: தற்போதைய திட்டத்தின்படிமாதக் கட்டணம் 189 ரூபாய். 5 ஜி.பி., டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் பி.எஸ்.என்.எல்., திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு 399 ரூபாய் கட்டணம். ஒரு நாளைக்கு ஒன்றரை ஜி.பி., பயன்பாடு வசதி உள்ளது. மாதம் 133 ரூபாய் தான். இதை விட்டு அதிக கட்டணம், குறைவான சலுகையுள்ள தனியார் நிறுவனத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை. பி.எஸ்.என்.எல்.,க்கு இணைப்பை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்

No comments:

Post a Comment


web stats

web stats