தற்போது அரசு பள்ளிகளை மூடும் முடிவு இல்லை. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் பிழைகள் இருந்தது. தற்போது, வெளியிடப்படும் புத்தகத்தில் எந்த பிழைகளும் இல்லாமல் சரி செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தை பார்த்து சிபிஎஸ்இ பள்ளிகளே வியந்து போய் உள்ளன. அதைப்போல் சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைகிறார்கள் என்று குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மருத்துவர்கள் ஆவார்கள். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment