பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கு மத்திய அரசு செவி சாய்க்காததே காரணம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது பேசிய அதிமுக கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு, பணிப் பதிவேடு பராமரித்தல் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களின் ஊதியத்தை ரூ. 15 ஆயிரமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்றார்
இதற்குப் பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது
பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் பள்ளிகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். வாரத்தில் மூன்று நாள்களுக்கு மட்டுமே அவர்களுக்கு பணி வழங்கப்படும். அதுவும் ஒரு நாளில் அவர்கள் 2 மணி நேரம் மட்டுமே பணிபுரிவர்
இருந்தபோதும், இவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வகையில், கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பேசியபோது அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை என பதிலளித்தார்
இந்தத் திட்டத்தின் கீழ் பலர் தொலைதூரத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களை, அவர்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்
No comments:
Post a Comment