rp

Blogging Tips 2017

அண்ணா நூலகம் பராமரிப்பின்றி முடங்கியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா நூலகம் பராமரிப்பின்றி முடங்கியது குறித்த உண்மை நிலை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய, நூலக அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், நூலகத்தில் நேரில் ஆய்வுசெய்ய அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை, கோட்டூர்புரத்தில் சர்வதேச நூலக அந்தஸ்தில், அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010ல் கட்டப்பட்டது. இந்நூலகம், நான்கு ஆண்டுகளாக கவனிப்பாரற்று, முன்னேற்றமின்றி முடங்கும் அபாயத்தில் உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு

இதுகுறித்து, தினமலர், செய்தி வெளியிட்டிருந்தது. இப்பிரச்னை நீதிமன்றத்துக்கு சென்றால் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். அதனால், அண்ணா நூலகத்தின் நிலை குறித்து விரிவான அறிக்கை தருமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறையில் இருந்து, நூலகத்தின் 8 தளங்களின் பொறுப்பாளர்களை தலைமைச் செயலகம் வரவழைத்து, விசாரணை நடத்தி அறிக்கை கேட்டுள்ளனர். ஆனால், பொது நூலகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், அண்ணா நூலகத்துக்கு நேரில் ஆய்வுக்கு வர தயங்கியுள்ளனர்.

அங்கு நேரில் வந்தால், பதவிக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில், தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே அறிக்கை கேட்டுள்ளதாக நூலக ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

உண்மை நிலவரம்

இதுகுறித்து ஊழியர்கள் கூறும்போது, "நூலகத்தை நேரில் ஆய்வு செய்து, வாசிப்பாளர்களின் கருத்துக்களையும், ஊழியர்களின் கோரிக்கைகளையும் கேட்டால்தான் உண்மை நிலவரம் தெரியும். மாறாக, அலுவலகத்தில் இருந்தபடி அறிக்கை கேட்டால், உண்மை என்ன என்பது மீண்டும் மறைக்கப்படவே வாய்ப்புகள் உள்ளன" என்றனர்.

No comments:

Post a Comment


web stats

web stats