அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த அரசு நிதிஒதுக்கியுள்ளது. ஆனால் துவக்க பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால், மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த, இக்கல்வியாண்டு முதல் நிதி ஒதுக்கீடு செய்து, விழா நடக்கிறது.
இதற்காக நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.2,350, உயர்நிலை பள்ளிகளுக்கு ரூ.2,450 வழங்கியுள்ளது. இந்நிதியில் ஆண்டுவிழா, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதேசமயம் துவக்கப்பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை. ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: சிறு குழந்தைகளை வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கியது பாரபட்சமே. வரும் காலங்களிலாவது அனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment