மே 6ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது
👍. கடந்த மாதம் நடைபெற்ற இந்த மருத்துவ படிப்பின் நுழைவு தேர்வான 'நீட்' தேர்வினை இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்
தமிழகத்தில் மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் போது வினாத்தாள் குளறுபடி நடந்ததால் இந்த தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது
அதனை இன்று அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என்று கூறி உத்தரவிட்டது
இந்நிலையில், 2 மணிக்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது.
👥மாணவர்கள் 💻www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று நீட் ✍தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்👍
No comments:
Post a Comment