வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலராக பணிபுரிந்து தற்போது ஆலங்காயம் ஒன்றியத்தில் AEEO ஆக பணிபுரியும் திருமதி. சி. சித்ரா அவர்கள் வாணியம்பாடி சென்னாம்பேட்டையில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்த திரு.வி.க நிதியுதவி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவர் காலனியில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்ய வழங்கிய தீர்ப்புக்கு கட்டுப்பட்டாததாலும், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ( DEEO) ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், சத்துணவு, சீருடை வழங்க 5 முறை உத்தரவிட்டும் AEE0 சித்ரா வழங்காத காரணத்தினாலும், பள்ளியின் தாளாளர் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தார், மாவட்ட ஆட்சியருக்கும் மதிப்பு
அளிக்கவில்லை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கும் மதிப்பு அளிக்கவில்லை எனவே சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று (25.04.2018) மேன்மைப் பொருந்திய மாநில மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறலுக்காக ரூ.2,00,000/- இரண்டு இலட்சம் ரூபாய் AEEO சித்ராவுக்கு அபராதம் விதித்ததுடன் அந்த தொகையை AEEO சித்ராவிடம் வசூலித்து பள்ளியின் தாளாளர் சி.மகேந்திரனிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் மேலும் AEE0 சித்ரா மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment