100, 1000, 10000, 100000, 1000000, 10000000
இந்த எண்களிலிருந்து சுலபமாக கழிப்பது எப்படி?
"உன் கையில 10 சாக்லேட் இருக்கு. 5 நான் எடுத்துக்கறேன். மீதி எத்தனை இருக்கும்?"
"மீதி எதுவும் இருக்காது சார்?"
"ஏன்?"
"ஏன்னா மீதியை நான் சாப்பிட்டுவிடுவேனே?"
கழித்தல் கணக்கு பற்றிய நிரந்தரமான, ஜாலியான ஜோக் இது. இப்போ நான் சொல்லித் தரப்போற உத்தி இந்த ஜோக்கை விட ஜாலியானது. எளிதானது.
எல்லாமே ஒன்பதிலிருந்து. கடைசி மட்டும் 10லிருந்து. இந்த மின்னல் மந்திரத்தை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் கண் மூடித் திறப்பதற்குள் பின்வரும் கழித்தல் கணக்குகளை போட்டுவிடலாம்.
1000 - 326
10000 - 7492
சரி இப்போ இன்னொரு உதாரணம் பாரக்கலாம்.
100000 - 86514
100 - 68 = ?
100 - 23 = ?
100 - 59 = ?
1000 - 79 = ?
1000 - 34 = ?
1000 - 61 = ?
1000 - 661 = ?
1000 - 783 = ?

- ஆயிரத்தை விட்டு விடுங்கள்
- 326ல் கடைசி இலக்கம் (வலது இலக்கம்) 6. அதை பத்திலிருந்து கழித்தால் 4.
- 2ஐ 9லிருந்து கழித்தால் 7
- 3ஐ 9லிருந்து கழித்தால் 6
- 674 இதுதான் விடை.
10000 - 7492
- பத்தாயிரத்தை விட்டு விடுங்கள்
- 7492ல் கடைசி இலக்கம் (வலது இலக்கம்) 2.அதை பத்திலிருந்து கழித்தால் 8.
- 9ஐ 9லிருந்து கழித்தால் 0
- 4ஐ 9லிருந்து கழித்தால் 5
- 7ஐ 9லிருந்து கழித்தால் 2
- 2508 இதுதான் விடை.
சரி இப்போ இன்னொரு உதாரணம் பாரக்கலாம்.
100000 - 86514
- ஒரு இலட்சத்தை விட்டு விடுங்கள்
- 86514ல் கடைசி இலக்கம் (வலது இலக்கம்) 4.அதை பத்திலிருந்து கழித்தால் 6.
- 1ஐ 9லிருந்து கழித்தால் 8
- 5ஐ 9லிருந்து கழித்தால் 4
- 6ஐ 9லிருந்து கழித்தால் 3
- 8ஐ 9லிருந்து கழித்தால்1
- 13486 இதுதான் விடை.
100 - 68 = ?
100 - 23 = ?
100 - 59 = ?
1000 - 79 = ?
1000 - 34 = ?
1000 - 61 = ?
1000 - 661 = ?
1000 - 783 = ?
No comments:
Post a Comment