திடீரென்று வங்கி தீ பிடித்ததோ, கொள்ளை நடந்தோ உங்கள் லாக்கரில் உள்ள பணம், நகை பறி போனால் இழப்பீடு எதுவும் பெற முடியாது. இந்த விதி முறை நம்மில் பல பேருக்குத் தெரியாது. அதனால் லாக்கரில் ரொக்கம் வைப்பதை விட, சேமிப்புக் கணக்கில் போட்டு வைப்பது தான் சிறந்தது.
வங்கியில் கொள்ளை நடந்தாலும், உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும். அதே போல, லாக்கரில் நகை வைப்பதை விட, அதை அடமானம் வைத்து நகைக் கடன் பெறலாம். உதாரணமாக, 10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகைக்கடன் பெறலாம். அடுத்த நாளே 24,000 ரூபாய் திருப்பிச் செலுத்தி விட வேண்டும்.
வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்துக்கொண்டால் ரூ.25,000 க்கு, ஒரு நாளைக்கு வட்டியாக ரூ. 8.25 செலுத்துவீர்கள். மீதமான 1000 ரூபாய்க்கு மாதம் ரூ.10 தான் வட்டி. நகை தேவைப்படும் போது கணக்கை முடித்து கொள்ளலாம். வங்கியில் கொள்ளை நடந்தாலும், உங்கள் நகைக்கு வங்கி பொறுப்பேற்கும்.
What a stuff of un-ambiguity and preserveness of valuable familiarity about unexpected feelings.
ReplyDeleteAlso visit my webpage :: grow lean muscle mass