Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமா?; ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேர மாற்றம் குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வரும் 25ம் தேதியுடன் இத்தேர்வு முடிவடைகிறது. மறுநாள் 26ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 79 தேர்வு மையங்களில் 29,622 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் முகப்பில் "டாப் சிலிப்" வைத்து தைத்ததுபோல் பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களிலும், "டாப் சிலிப்" தைக்கப்பட உள்ளது. "ஆன்-லைன்" மூலம் "டாப் சிலிப்"களை பதிவிறக்கம் செய்துகொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள்கள், பள்ளிகளுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை. கடந்தாண்டு வரை, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 10.00 மணிக்கு துவங்கி 12.45 மணிக்கு முடிந்தது; இரண்டரை மணி நேரம் தேர்வு எழுதவும், 15 நிமிடம் வினாத்தாள் படித்து பார்க்கவும் அவகாசம் தரப்பட்டது. தற்போது தேர்வு எழுதும் நேரத்தில் மாற்றம் செய்து காலை 9.00 மணிக்கு துவங்கி 15 நிமிடம் வினாத்தாள் வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டு 9.15 முதல் 11.45 மணி வரை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படும் என்ற தகவல் நிலவுகிறது. கோடை காலத்தை சமாளிக்க ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வை துவங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், இதுவரை அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை" என்றார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இன்னும் 15 நாட்களே இருப்பதால், தேர்வு நேரத்தில் செய்யப்படும் மாற்றம் குறித்து பள்ளி கல்வித்துறை தெளிவான அறிவிப்பு செய்யாததால் ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் குழப்பத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment


web stats

web stats