Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பிளஸ் 2: முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று தொடக்கம்

பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான பிளஸ் 2 முக்கியப் பாடத் தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகின்றன.
பிளஸ் 2 இயற்பியல் பாடத் தேர்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதன்பிறகு, கணிதப் பாடத்துக்கான தேர்வு மார்ச் 14-ஆம் தேதியும், வேதியியல் பாடத்துக்கான தேர்வு மார்ச் 17-ஆம் தேதியும், உயிரியல் பாடத்துக்கான தேர்வு மார்ச் 20-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

பொறியியல், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகியப் பாடங்களில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவதால் இந்தப் பாடத் தேர்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. வழக்கமான கண்காணிப்பை விட இந்தப் பாடத் தேர்வுகளுக்காக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் தேர்வு மையங்களை பார்வையிட உள்ளனர்.

No comments:

Post a Comment


web stats

web stats