Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஏப்ரல் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம்

ஏப்ரல் மாதம் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம் என, கடந்த மாதம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். இதையடுத்து தற்போது அதற்கான பணிகளை சென்னை துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, சென்னை, உள்ளிட்ட 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. பாதுகாப்பு காரணத்திற்காகவும், வேறு சில காரணத்திற்காகவும் துறைமுகங்களில் வெளியாட்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை. துறைமுகங்களில் 24 மணி நேரமும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் இருப்பது வழக்கம்.
பொதுவாக துறைமுகங்களை, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட வேண்டுமென்றால், நிர்வாக அலுவலகத்தில் உரிய அனுமதி சீட்டு வாங்க வேண்டும். இதனால் துறைமுகங்களை பார்வையிட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் துறைமுகங்களை பார்வையிட, பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என, பல்வேறு பள்ளிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். 
இந்த கோரிக்கையை மத்திய கப்பல்துறை அமைச்சகம் நீண்ட நாள்களாக ஆலோசித்து, ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவின் பெரிய துறைமுகங்களை பார்வையிட, பள்ளி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் முதல் துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப் படும் என, மத்திய அமைச் சர் ஜி.கே.வாசன் அறிவித் தார். தற்போது சென்னை துறைமுகத்தில் அதற்கான நடவடிக்கையை துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது.
இது குறித்து சென்னை துறைமுக தலைவர் அதுல்யா மிஸ்ரா கூறுகையில், ‘பள்ளி குழந்தைகள் துறைமுகத்தை பார்வையிட அனுமதி அளிக்க வேண்டும் என, பல தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தற்போது இதற்கான அனுமதியை பெற்று தந்துள்ளார். தற்போது பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்ததும் மாணவர்கள் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
துறைமுகத்தின் 7வது கேட்டில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மாணவர்களுக்கு அனுமதி உண்டு. மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ளும் விதத்தில், துறைமுகத்தில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. எனவே, இங்கு வரும் மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்

No comments:

Post a Comment


web stats

web stats