Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

மாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று இனி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தகவல் மேலாண்மை திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில் மாணவர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவை ஆதார் எண்ணுடன் சேர்த்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் பல மாவட்டங்களில் ஆதார் எண் பதிவேற்றம் செய்யப்படும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
. இந்த பணிகளை வேகப்படுத்த பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் இனி இணையதளத்தின் மூலம் மாணவர்களது ஆதார் எண்களை எளியமுறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக புதிய உத்தரவு வரும் வரை ஏற்கனவே வழங்கப்பட்ட இஎம்ஐஎஸ் ஆப்லைன் சாப்ட்வேர் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டாம். மாணவர்களின் ஆதார் எண்களை சேகரித்து வைத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats