பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
பிளஸ் 2-வில் முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் இயற்பியல் பாடத்துடன் திங்கள்கிழமை தொடங்கின. முதல் பாடமான இயற்பியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால் பெரும்பாலான மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்தனர்.
தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள் கூறியது: இயற்பியல் பாடத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்த கேள்விகளே அதிகளவில் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு ஒரு மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தன. இதனால், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அதேபோல், பொருளாதாரப் பாட வினாத்தாளும் மிகவும் எளிமையாக இருந்தது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment