Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு முடிவு ரிலீஸ்: தமிழகத்தை சேர்ந்த 260 பேர் தேர்வாகினர்



ஐ.ஏ.எஸ்., மற்றும், ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, உயர் பதவிகளுக்காக, கடந்த ஆண்டு, டிசம்பரில் நடத்தப்பட்ட, மெயின் தேர்வு முடிவை, யு.பி.எஸ்.சி., நேற்றிரவு வெளியிட்டது. தமிழகத்தில், 914 பேர், மெயின் தேர்வை எழுதியதில், 260 பேர், நேர்முகத் தேர்வுக்கு, தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை, மெயின் மற்றும் நேர்முகத் தேர்வு என, மூன்று கட்டங்களாக, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு, மே மாதம் நடந்த, முதல் நிலை தேர்வை, நாடு முழுவதும், ஆறு லட்சம் பேர் எழுதினர். இதில் இருந்து, 12 ஆயிரம் பேர், மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வு, கடந்த டிசம்பரில் நடந்தது. இதன் முடிவு, தீதீதீ.தணீண்ஞி.ஞ்ணிதி.டிண என்ற, இணையதளத்தில், நேற்றிரவு வெளியானது. ஏப்ரல், 7ம் தேதியில் இருந்து, டில்லியில், நேர்முகத் தேர்வு துவங்குகிறது. இதன் முடிவு, மே மாதத்திற்குள் வந்துவிடும். மெயின் தேர்வில், தேர்வாகியுள்ள, 12 ஆயிரம் பேரில், 3,003 பேர், இறுதியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில், 914 பேர், மெயின் தேர்வை எழுதினர். இதில், 260 பேர், நேர்முக தேர்வுக்கு தேர்வு பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, உயர் பணிகளுக்காக நடத்தப்படும் இந்த தேர்வில், சில ஆண்டுகள் முன் வரை, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே, அதிகளவில் தேர்வு பெற்றனர். ஆனால், சமீப காலமாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், முத்திரை பதித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment


web stats

web stats