Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

RTI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள்

Right to information act 2005
R TI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :
| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை
2. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய சேவை எனில் RTIல் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை


3. கோப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய காலம் முடிந்து, / அழிக்கப்பட்டிருப்பின் தெரிவிக்க வேண்டியதில்லை
4. கேள்விகளாய் இருந்தால் பதில் தெரிவிக்க வேண்டியதில்லை
5 கேட்ட தகவலுக்கான கோப்பு இருந்தால் நகலாக வழங்கலாம்.
6. நாமாக விளக்க மோ நாம் அறிந்தவற்றையோ கூறக் கூடாது.
7. தெளிவுரை, விளக்கம், மொழிபெயர்ப்பு செய்து தர வேண்டியதில்லை.
8. கோரிக்கை, புகார், யூகம் அடிப்படையிலான கேள்விகளுக்கு தெரிவிக்க வேண்டியதில்லைமனுதாரர் தன் மீதான புகார் குறித்து நகல் கேட்டால் கொடுக்கலாம்.
9. மனுதாரர் முன்பு கொடுத்த சாதாரண மனுவைக் கேட்டால்  தெரிவிக்க வேண்டியதில்லை.
10. மனுதாரர் கேட்கும் படிவத்தில் தர வேண்டியதில்லை
11. பல்வேறு கோப்புகளை தொகுத்து தர வேண்டியிருப்பின், விதிப்படி தொகுத்து தர வேண்டியதில்லை.
12. ஏன் எப்படி, எங்கு எதனடிப்படையில் போன்ற கேள்விகளுக்கும், ஆம் எனில் பதில் ,இல்லை எனில் பதில் போன்ற உபகேள்விகளுக்கும் பதில் தர வேண்டியதில்லை
13. சாதாரண திட்டங்களில் தந்த மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்க முடியாது
14. மனுதாரருக்காக வேறொருவர் கேட்க கூடாது (வக்கீல் தன் கட்சிக்காரருக்காக)
15. மூன்றாம் நபர் குறித்த விபரம் , நமது அலுவலக பணியாளர் பற்றிய எந்த விபரமும் தர வேண்டியதில்லை.(சம்பளம், கிப்ட், IT, memo, ஒழுங்கு நடவடிக்கை)மனைவி கூட மூன்றாம் நபர்
16. பட்டா ட்ரான்ஸ்பர், சிட்டா போன்ற விபரங்கள் தெரிவிக்க வேண்டியதில்லை
17.SR Copy தர  வேண்டியதில்லை
18. பணி நியமனம் தொடர்பான நகல் தர வேண்டியதில்லை
19. பணியாளரது தனிப்பட்ட விபரங்கள் (அ) அலுவலக பணி தொடர்பாக வரப் பெற்ற விண்ணப்பங்களில் உள்ள விண்ணப்பதாரரது விபரம், தெரிவிக்க வேண்டியதில்லை
20. வேண்டிய விபரங்களைப் பெற்று தொகுத்து அனுப்ப வேண்டியதில்லை
21. மிக அதிக அளவு விபரம் கோரப்பட்டால், தெரிவிக்க வேண்டியதில்லை
22. SR நகல் வழங்க வேண்டியதில்லை.பொது நலன் எனக் கருதினால் முதல் பக்கம் மட்டும் தரலாம்
23. ஒரே மாதிரியான தகவல்களை திரும்ப திரும்ப கேட்க கூடாது
24. நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள போது, மனுதாரர் RTIல் மனு சமர்பித்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கலாம்
25. பதிவேடுகளில் இல்லாதவை. தகவல் அல்ல. வழங்க வேண்டியதில்லை
26. பதில் செயல்முறை ஆணை குறிப்பாணை வடிவில் கூடாது

No comments:

Post a Comment


web stats

web stats