பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு 'கண்டனம்' என்ற தண்டனை, 'தவறு இனி நடக்கக்கூடாது' என்ற எச்சரிக்கை ஆகிய இருவித தண்டனையை அரசு தேர்வுத்துறை வழங்குகிறது.
இதில் 'கண்டனம்' என்ற தண்டனை பெற்ற ஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரங்களை பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது 2014 பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் சரியாக திருத்தாத ஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஆண்டு ஊதிய உயர்வு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியதாவது: மொழி ஆசிரியர்களை கூடுதல் விடைத்தாள்களை திருத்த வற்புறுத்துகின்றனர். வேகமாக திருத்த நெருக்கடி கொடுக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் தவறு ஏற்படுகிறது. மேலும் தண்டனை விபரங்களை 'சர்வீஸ் புக்கில்' பதிவு செய்தால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர்,என்றார்.
No comments:
Post a Comment