வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான் பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலைமாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியை அது சார்ந்த பிற வங்கிகளுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 12, 13, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.
மேலும் ஜூலை மாதம் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய காரணங்களால் ஜூலை மாதம் மொத்தம் 20 நாள்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஜூலை மாதம் பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment