Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய தகவல்

7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
🌹குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
🌹01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.

🌹ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு பற்றிய கணக்கீடுகள்
****
  • தற்போது பணியில் இருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அவரவர் பெறும் அடிப்படை ஊதியத்தில் (Basic pay+Grade pay+pp) சேர்த்து 32 % த்தை பெருக்கினால் வருகிற தொகையினை புதிய ஊதியமாக வழங்கிட மத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவித்துள்ளது.
  • 🌹இந்த உயர்வு தற்போது அவரவர் பெறும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 125 % சேர்த்து கணக்கிடும் போது 14.2 % சத உயர்வு வரும். ஒவ்வொருவரின் 01.01.2016ல் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தினை கணக்கிட அவரவர் 01.01.2016ல் பெற்று வரும் அடிப்படை ஊதியத்தினை 2.57 % ஆல் பெருக்கினாலும் அதே உயர்வுதான் வரும்.
  • 🌹குறைந்தபட்ச ஊதியம் 26,000 நிர்ணயம் செயதிட சங்கங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியது.மத்திய அரசு 18,000 மட்டுமே என்று அறிவித்துள்ளது.
  • 🌹நாளேடுகளில் 23.5 % ஊதிய உயர்வு என்பது பொருத்தமில்லாத செய்தியாகும்.23.5 % ஊதிய உயர்வு என்பது பெருநகரங்களில் பணிபுரிவோர் பெறுகின்ற இதர படிகள் சேர்த்து கணக்கிடும் முறையாகும்.

No comments:

Post a Comment


web stats

web stats