- முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்., பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- பணி நியமன முழு விபரம்.
- பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.
- தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.
- GPF/TPF/CPS எண் விபரம்.
- NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம்.
- ஒவ்வொரு ஆண்டும் பணி சரிபார்ப்பு செய்யப்பட்ட விபரம் (Service Verification).
- ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட விபரம்
- மருத்துவ விடுப்பு / ஈட்டிய விடுப்பு / அரைச்சம்பள விடுப்பு / ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகள் எடுக்கப்பட்ட விபரம்.
- ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டவிபரம் (15 /30 நாட்கள்).
- உயர்கல்வி படிக்க முனு அனுமதி / பின் ஏற்பு அளிக்கப்பட்ட விபரம்.
- உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விபரம்.
- சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறப்பட்ட விபரம்.
- ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதற்கான முழுமையான ஆணை விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்.
- தேர்வுநிலை / சிறப்பு நிலை வழங்கப்பட்ட விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்
- ஊதியத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது பற்றிய முழு விபரம். எடுத்துக்காட்டாக தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூ.750மற்றும் 4300 தர ஊதியம் பெறுவோருக்கு சிறப்பு படி ரூ.500 வழங்கப்படும் விபரம்.
- பதவி உயர்வு பெறும்போது தொடர்புடைய ஆணை பதிவு, புதிய பதவி பணி வரன் முறை செய்யப்பட்ட விபரம், 22B சான்று பெறப்பட்ட விபரம், பதவி உயர்வு ஊதிய நிர்ணய விபரம்.
- பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயம் செய்யப்படும் தேதி குறித்து தனியரின் விருப்பம் ஏதேனும் இருந்தால் அது பற்றிய பதிவு.
- ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் முழு விபரம் மற்றும் தனியரின் விருப்பம் (option)குறித்த பதிவு.
- வாரிசுதாரராக யாரை நியமனம் செய்திருக்கிறோம் என்பது பற்றிய விபரம்.
- பொது மாறுதல்களில் வந்த விபரம்.
No comments:
Post a Comment