: தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், தொடக்க கல்வி பட்டயப்படிப்பில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூலை 4ம் தேதி முதல் துவங்கவுள்ளது.
தொடக்க கல்வி பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் மற்றும் கவுன்சிலிங் மையம், நேற்று www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட மையங்களில், கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில், ராஜவீதியிலுள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடக்கவுள்ளது.
ஜூலை 4ம் தேதி ஆங்கிலம், தெலுங்கு, உருது, சிறப்பு பிரிவினருக்கும், ஜூலை 5ல் தொழிற்பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும் நடக்கவுள்ளது. தொடர்ந்து, ஜூலை 7ல் தொழிற்பிரிவு மாணவியருக்கும், ஜூலை 8ல் கலைப்பிரிவு மாணவியருக்கும், ஜூலை 9ல் அறிவியல் பிரிவு மாணவியர்களுக்கும் நடக்கவுள்ளது.
கலந்தாய்வு குறிப்பிட்ட நாட்களில், காலை 9:00 மணியளவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க வரும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு, மேல்நிலைக்கல்விக்கான சான்றிதழ், ஜாதி, இருப்பிட சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் உள்ளிட்ட சிறப்பு பிரிவுக்கான சான்றிதழ்களை எடுத்துவரவேண்டும் என கோவை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment