மதுரை: மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்து பேசுகையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து சரியான முடிவுகளை தலைமையாசிரியர்கள் எடுக்க வேண்டும்.
மதிப்பெண் குறைவு உட்பட காரணங்களை கூறி மாணவர் சேர்க்கையை இழுத்தடிக்காமல் அதிகாரி ஆலோசனை பெற்று உடன் முடிவு எடுக்க வேண்டும், என்றார்.
கற்றலில் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து கருத்தாளர்கள் பேசினர். சி.இ.ஓ.,யின் நேர்முக உதவியாளர்கள் அனந்தராமன், அதிராமசுப்பு, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா மற்றும் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment