Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

'நீட்' தேர்வு முடிவு வெளியிட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 'நீட்' தேர்வு முடிவை வெளியிட, இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.மதுரையைச் சேர்ந்த, ஜொனிலா உட்பட, ஒன்பது பேர் தாக்கல் செய்த மனு: எம்.பி.பி. எஸ்.,- - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' என்ற தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்த, 2012ல் முடிவு செய்யப்பட்டது. மொத்தம், 180 வினாக்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா, 45 வினாக்கள் இடம்பெறும்.

அறிவிப்பு
மத்திய அரசின், 'நீட்' தேர்வுக்கு, 2016ல், உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2016ல், 'நீட்' தேர்வை ஆங்கிலம், ஹிந்தியில் நடத்த
அறிவிப்பு வெளியானது. 2017லிருந்து, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, அசாமி, குஜராத்தி, கன்னடம், ஒடியா மொழிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியானது. இந்தியா முழுவதும், 2017 மே, 7ல், 'நீட்' தேர்வு நடந்தது. நாங்கள் ஆங்கிலத்தில் எழுதினோம். இந்த அகில இந்திய போட்டி தேர்வை, ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், வெவ்வேறு மாறுபட்ட வினாக்கள் அடங்கிய வினாத்தாள்கள், பல்வேறு இடங்களில் வினியோகிக்கப்பட்டன; இது, அதிர்ச்சியளிக்கிறது. 'நீட்'தேர்வு முடிவு, ஜூன், 8ல் வெளியாகிறது.
இதன் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடை பெறும். இதனால், எங்களை போன்ற மாணவர் களுக்கு பாதிப்பு ஏற்படும்; தேர்வு முடிவை வெளி யிட தடை விதிக்க வேண்டும். மே, 7ல் நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். அகில இந்திய அளவில், ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப் படையில், புதிதாக, 'நீட்' தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்திருந்தனர்.
திருச்சி சாந்தமலர்க்கொடி, தன் தந்தை தமிழன்பன் மூலம், 'நாடு முழுவதும் ஒரே மாதிரியாக, 'நீட்' தேர்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசின் அவசர சட்டம் - 2016 கூறுகிறது. ஹிந்தி, குஜராத்திமொழிகளில் வினாக்கள் எளிதாக இருந்தன; ஆங்கிலத்தில் கடினமாகவும், தமிழில் எளிதாகவும் இருந்தன.
இதில் பாரபட்சம்காட்டப்பட்டு உள்ளது. தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். ஒரே மாதிரியாக புதிதாக, 'நீட்' தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்' என மனு தாக்கல் செய்தார். நீதிபதி, எம்.வி.முரளிதரன் விசாரித்தார். மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்விவாரியம் தான், 'நீட்' தேர்வை நடத்துகிறது. ஜொனிலா உட்பட ஒன்பது பேர், கடந்த வாரம் தாக்கல் செய்த வழக்கில், இதுவரை, சி.பி. எஸ்.இ., பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ''சி.பி.எஸ்.இ., பதில் மனு தாக்கல் செய்த பின்பே, இவ்விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியும்,'' என்றார்.
உத்தரவு
நீதிபதி, 'வினா அமைப்பில், மாநிலத்திற்கு மாநிலம் பாகுபாடு காட்டப்பட்டு உள்ளதாக, மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். 'நீட்' தேர்வு முடிவை வெளியிட, இடைக்கால தடை விதிக் கப்படுகிறது. 'மத்திய சுகாதாரத் துறை செயலர், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர், சி.பி. எஸ்.இ., செயலர், ஜூன், 7ல், பதில் மனு தாக் கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment


web stats

web stats