Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

2021 முதல் பல்கலை. பேராசிரியர் பணிக்கு பிஹெச்டி கட்டாயம்

2021 முதல் பல்கலை. பேராசிரியர் பணிக்கு பிஹெச்டி கட்டாயம்
எதிர்வரும் 2021-ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு ஆராய்ச்சிப் படிப்பு (பிஹெச்டி) கட்டாயமாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுபவர்கள் பணியில் சேருவதற்கு முன்பாக ஒரு மாத கால பயிற்சி வகுப்புகளையும் நிறைவு செய்ய வேண்டும் எனவும் விதிகள் வகுப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பான வரைவு அறிக்கையை விரைவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விரைவில் வெளியிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதையm நிலவரப்படி, பல்கலைக்கழக உதவிப் பேராசியர் பணிக்கு சேர விரும்புவர்கள், முது நிலை பட்டப்படிப்புடன் நெட் (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) அல்லது செட் (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டுதல்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக யுஜிசி வெளியிட்டது. பிஹெச்டி முடித்தவர்களுக்கு நெட் அல்லது செட் தேர்வு தகுதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழிகாட்டுதல்கள் மீதான கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுவதாக யுஜிசி தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்பேரில், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டு, அதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது யுஜிசி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு முதல் உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஹெச்டி படிப்பு கட்டாயம் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், பிஹெச்டியுடன் நெட் அல்லது செட் தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், 2009-க்கு முன்னதாக பிஹெச்டி முடித்தவர்களுக்கு நெட் அல்லது செட் தேர்வு தகுதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment


web stats

web stats