Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆசிரியர்,அமைச்சு பணியாளர்களின் மதிப்பெண் சான்று உண்மைத்தன்மையை ஆன்லைனில் சரி பார்க்கலாம்: அரசு தேர்வுகள் துறை உத்தரவு

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் போலியாக அளித்தது கடந்த 2004ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பதற்காக அரசுத் தேர்வுகள் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.


இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் உண்மை சான்றுகள் சரி பார்த்து மீண்டும் வருவதற்கு பல மாதங்கள், ஆண்டுகள் ஆகிறது. இவ்வாறு வீண் காலதாமதம் ஏற்படுவதால் ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிக்க முடிவதில்லை. அதுபோல கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்கள் பவானி சாகர் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. இந்த காலதாமதத்தை தவிர்க்க தற்போது அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சான்றுகளின் உண்மைத் தன்மையை சரி பார்த்துக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி அரசுத் ேதர்வுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை விரைந்து செய்து முடிக்கும் வகையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பிரத்யேகமாக யூசர் ஐடி, பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது.

இந்த யூசர் ஐடி, பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்து மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். ஆன்லைனில் கிடைக்கப் பெறாத மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும், உண்மைத் தன்மை ஒத்துப் போகாத சான்றிதழ்களின் நகல்களை மட்டும் தேர்வு துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதால் தனிக் கவனம் செலுத்தி நம்பகத்தன்மை வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment


web stats

web stats