வழக்கம் போல், எதிர்பார்ப்புகள் யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் ‘வந்தே தீரும்’ என நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த ‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.
ஊழியர்கள் பெறும் ஊதியத்தில் 12% என்று உள்ள வைப்பு நிதி சந்தாவை வருமானத்துக்கு ஏற்றாற்போல் திருத்தி அமைப்பது முதலாவது அம்சம். ரூ.15,000 ஊதியம் பெறுவோருக்கு வருங்கால வைப்பு நிதிக்கு மாதாந்திர சந்தா செலுத்துவதிலிருந்து ‘விலக்கு அளிப்பது’ மற்றொரு அம்சம். இந்த இரண்டாவது அமசம் பற்றி அதாவது, ரூ.15,000 ரூபாய் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வைப்பு நிதி செலுத்துவதிலிருந்து விலக்குப் பற்றி ஓர் அலசல்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களை உதாரணமாகக் கொள்வோம். இவர்களுக்கான ‘வருங்கால வைப்பு நிதி’ (general provident fund) இது 01.04.1935 முதல் அமலில் உள்ளது. முறையான அரசுப் பணியில் உள்ள அனைவரும் வருங்கால வைப்பு நிதி (general provident) சந்தாதாரர் ஆவது கட்டாயம். எவருக்கும் விதிவிலக்கு கிடையாது.
அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்கள் முன்பு வரை, வைப்பு நிதிக்கான சந்தா தொகையானது அந்தந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.
1976-ல் குறைந்தபட்சம் ரூ.15-ஆகவும் அதிகபட்சமாக ரூ.250-ஆகவும் இருந்தது. 1992-ல் குறைந்தபட்சமாக இருந்த சந்தா வீதம் ரூ.90-ஆகவும், அதிகபட்சம் ரூ.800-ஆகவும் இருந்தது. 2001-ல் குறைந்தபட்சமாக ரூ.360-ஆகவும் அதிகபட்சமாக ரூ.3,120-ஆகவும் இருந்தது. தற்போதைய குறைந்தபட்ச சந்தா தொகை ரூ.1,610-ஆகவும் அதாவது, இன்றைய தேதியில் அமலில் உள்ள சந்தா தொகை 12%. இதன்படி குறைந்தபட்ச ஊதியமான ரூ.6100 மற்றும் இதற்கான 119 சதவிகித அகவிலைப்படி மீது 12% என ரூ.1,610 கிடைக்கும்.
12% கணக்கீடு என்பது, ஊழியர் பெறும் அடிப்படை ஊதியம் (Basic pay), தர ஊதியம் (grade pay), தனி ஊதியம் (personal pay), சிறப்பு ஊதியம் (Special Pay) மற்றும் அந்தந்த தேதியில் தரப்படும் அக விலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 12% ஆகும்.
எப்போதெல்லாம் ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு தரப்படுகிறதோ, அப்போது சந்தா தொகை, அதற்கேற்ப 12% பிடித்தம் செய்யப்படும். ஊழியர் விருப்பம் தெரிவித்தால், 12 சதவிகிதத்துக்கும் அதிகமான தொகையை வைப்பு நிதி சந்தாவாக செலுத்தலாம். மொத்த ஊதியம் அத்தனையையும்கூட சந்தா தொகை ஆக்கி சேமிக்கலாம், தடை இல்லை. ஆக எல்லா காலகட்டத்திலும் வருங்கால வைப்பு நிதிக்கான சந்தா தொகையானது ஊதியத்தின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
வட்டி!
1976-ல் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் ஊடியர்களின் சந்தா தொகைக்கு தரப்பட்ட வட்டி விகிதம் 8%. இந்த 8 சதவிகித வட்டி விகிதமானது மெல்ல மெல்ல ஊர்ந்து, உயர்ந்து தொண்ணூறுகளில் 12 சதவிகிதமாக நிலைகொண்டது, அது மட்டுமன்றி செலுத்தப்பட்ட சந்தா தொகை இருப்பில் கடன் பெறாத - அதாவது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கடன் வாங்காத - கணக்குகளுக்கு ஒரு சதவிகிதம் போனஸ் வட்டி வழங்கப்பட்டு அதிகபட்ச வட்டி விகிதம் 13 சதவிகிதமாக இருந்தது.
2000 மாவது ஆண்டு வரை 12% சதவிகிதமாக இருந்த வட்டி, 2001-ல் 11% ஆக இறங்கி, 2002-ல் 9.5 சதவிகிதமாக குறைந்து 2003-ல் 9 சதவிகிதமாக சுருங்கி, 2004-ல் 8 சதவிகிதமாக குறைந்துவிட்டது. மறுபிறவி எடுத்தது போல் 2011-ல் 8.6 சதவிகிதமாக உயர்ந்து 1.4.2012-ல் 8.8 சதவிகிதமாக வளர்ந்த வட்டி விகிதம், 1.4.2013 முதல் மீண்டும் சரிந்து 8.7 சதவிகிதமாக உள்ளது. இந்த வட்டியை அரசுதான் வழங்குகிறது.
வட்டி சிறப்பு!
வேறு எந்த சேமிப்பு முறைக்கும் இல்லாத வட்டி சிறப்பு (Interest speciality) இந்த வருங்கால வைப்பு நிதி சேமிப்புக்கு உண்டு. அதாவது, ஓர் ஊழியரின் ஜனவரி மாதம், பிப்ரவரி மாதம் அல்லது ஆண்டின் ஏதோ ஒரு மாதத்துக்கான ஊதியமானது, அவர் விடுப்பில் இருந்ததாலோ அல்லது வேறு ஏதாவதொரு காரணத்தாலோ ஓரிரு மாதங்கள் தாமதமாக வழங்கப்படலாம். ஊதியம் வரைவு செய்யும்போதுதான் வைப்பு நிதிக்கான சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும். என்றாலும், ஊதியம் எந்த மாதத்துக்கு உரியதோ அந்த மாதத்திலிருந்தே இந்த சந்தா தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். இது வருங்கால வைப்பு நிதி வட்டி கணக்கீட்டின் மீதான சிறப்பம்சம்.
ஊழியர் பங்களிப்பை ரத்து செய்யலாமா?
‘ரூ.15,000/- ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, வருங்கால வைப்பு நிதிக்கு சந்தா செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கலாமா’ என்பது தற்போதைய பரிசீலனை. ‘அப்படி ரத்து செய்தால், அந்த குறைந்த சம்பளத்தினர் ரூ.1,800 சதவிகிதத்தை (அதாவது, இன்றைய நிலையில்) கூடுதலாக வீட்டுக்கு எடுத்துச் செல்வர்’ என்பது இந்தப் பரிசீலனைக்கான உபாயம். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை உயர்த்துவதற்காக இந்த நடைமுறை பரிசீலனைக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால், நடைமுறை சித்தாந்தம் எதிர்மறையாகத்தான் உள்ளது. அதாவது, குறைந்த சம்பளக்காரர்களின் சம்பளமானது அவ்வப்போது அளவு கூடினாலும், விளைவு கூடுவதில்லை என்பதே நிதர்சனம். எனவே, இந்த 1,800 ரூபாயை வீட்டுக்கு எடுத்துச் சென்று விளையப் போவது அதிகமில்லை, ரூ.15,000 சம்பளம் வாங்குகிறவர்களுக்கு!
காணும் பொருள் யாவும் தேவையானதாகத் தோன்றும் கடை வீதியில் கண நேரம் நடந்து சென்றால், ரூ.1,800 அர்த்தமற்று கரைந்து போகலாம். இதைவிட பேரபாயம் ஒன்றும் உண்டு. செல்ஃப் ஃபைனான்சியர்!
வருங்கால வைப்பு நிதியின் இருப்பில் உள்ள தொகையில் 75% வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். நீண்ட கால, நிலையான சேமிப்பை இலக்காகக் கொண்டதுதான் வருங்கால வைப்பு நிதி என்றாலும், அவசர பணத் தேவைக்கு அடமானம் ஏதுமின்றி ஆறு மாதத்துக்கு ஒருமுறை கடன் பெற அபயமளிக்கும் செல்ஃப் ஃபைனான்சியர் இந்த வருங்கால வைப்பு நிதிதான். குறைந்த சம்பளத்தினருக்கு வருங்கால வைப்பு நிதியில் விலக்கு அளிக்கப் பட்டால் இந்த செல்ஃப் ஃபைனான்சியர் செத்துப் போய்விடுவார்.
சம்பளத்துக்கு ஏற்ப சந்தா சதவிகிதம்!
இது ஏற்புடைய ஒன்றுதான். ஏனெனில், அகவிலைப்படி (Dearness Allowance) வழங்குவதில் இப்படி ஓர் இரட்டை அணுகுமுறை ஆறாவது சம்பளக்குழு வரை அமலில் இருந்தது. அதாவது, கூடுதல் சம்பளம் பெறுவோருக்கு குறைந்த (சதவிகித) அகவிலைப்படியும், குறைந்த சம்பளத்தினருக்கு கூடுதல் (சதவிகித) அகவிலைப்படியும் தரப்பட்டது. 01.01.1996 முதல் அமலுக்கு வந்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைக்குப்பின் அனைவருக்கும் ஒரே சதவிகித அகவிலைப்படி என்றானது.
கூடுதல் சம்பளம் பெறுவோருக்கு வருங்கால வைப்பு நிதியின் சந்தா தொகையில் சதவிகித அளவை அதிகரிப்பதால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் அவர்கள் ஏனைய சேமிப்பு முறைகளில் செய்யும் முதலீட்டை வருங்கால வைப்பு நிதிக்கே கூடுதல் சந்தா செலுத்தி பிரிவு 80சி-யின் கீழ் அனுமதிக்கப்படும் வரிக்கழிவை பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், குறைந்தபட்ச ஊதியமான ரூ.15,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பில் இருந்து விலக்கு அளிக்க முற்பட்டால், சேமிக்கவும் சேமிப்பில் கடன் பெறவும் அவர்களுக்கு உள்ள ஒரே வழியும் அடைபட்டுப் போகும். சந்தா தொகையை ரத்து செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை அதிகரிக்கலாம் என்கிற கொள்கை முடிவு ரூ.15,000 சம்பளம் பெறும் ஊதியத்தினரை பொறுத்தமட்டில் பாதகத்தையே ஏற்படுத்தும். குறைந்த சம்பளம் வாங்குகிற அரசு ஊழியர்களை நோகடிப்பதில் என்னதான் இன்பமோ!
ப.முகைதீன் சேக்தாவுது

No comments:
Post a Comment