தற்போதைய கல்வி நிலையை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த, கீழ்கண்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
* அரசு எடுத்த கொள்கை முடிவின்படி, ஆங்கில வழி வகுப்புகள் துவங்க, எத்தனை பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது
* தமிழகம் முழுவதும், ஆங்கில வழி வகுப்புகளில், எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர். 2012 - 13 முதல், ஆண்டு வாரியாக விபரங்கள் அளிக்க வேண்டும்
* தமிழ் வழி கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் தான், ஆங்கில வழி கல்வியையும் கற்பிக்கின்றனரா?
* ஆங்கில வழி கல்வி கற்பிக்க, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா; அவ்வாறு எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்
* ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி என்ன?
* அரசு பள்ளிகளை விட, கிராமப்புறங்களில் தனியார் பள்ளிகளை, பெற்றோர் நாடுவது ஏன்?
* அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என, அரசு ஏன் கட்டாயப்படுத்தக் கூடாது?
* சரியான நேரத்தில் பணிக்கு வர தவறிய ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
* ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை சரிபார்க்க, பணி நேரத்தில் அவர்கள் பணியில் இருக்கின்றனரா என்பதை பரிசோதிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதா?
* அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராமப்புறம், மலை பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' முறையை ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது?
* பள்ளி நேரங்களில், மொபைல் போன் பயன்படுத்த, ஆசிரியர்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது?
* ஆசிரியர்களின் வருகை, கற்பித்தலை சரிபார்க்க, பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சாத்தியம் உள்ளதா?
* ஆசிரியர்களின் பணிமூப்பை, மாநில அல்லது மாவட்ட வாரியாக கொண்டு வருவதன் மூலம், அவர்களை சொந்த இடத்துக்கு வெளியில் பணியாற்ற ஏற்பாடு செய்வது உகந்ததாக இருக்காதா?
* மாறி வரும் நிலைக்கு ஏற்ப, ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படுகிறதா?
* கடந்த, 10 ஆண்டுகளில், அரசு உயர்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை; கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
* அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளில், 10 ஆண்டுகளில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் எவ்வளவு?
* கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் என்ன?
* போலீசாருக்கு இருப்பது போல், சங்கம் துவங்க, ஆசிரியர்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது; கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதால், எதிர்கால மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்கள் என்பதால், தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க, சங்கத்தை பயன்படுத்துவதால், அதை துவங்க, அரசு ஏன் தடை விதிக்க கூடாது?
* கிராமப்புறங்களில் கல்வி தரத்தை மேம்படுத்த, அரசு பள்ளிகளை நிர்வகிக்க, தன்னார்வ அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியாரை ஏன் ஈடுபடுத்தக் கூடாது?
இந்த வழக்கு விசாரணை, ஜூலை, 14க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment